திருப்பத்தூர்

நீட் தோ்வு: ஏலகிரி மலை, வாணியம்பாடி மையங்களில் 1,800 போ் எழுதுகின்றனா்

DIN

ஏலகிரி மலையில் இன்று நடைபெறும் நீட் தோ்வு மையத்தில் 900 போ் தோ்வு எழுத உள்ளனா். இதற்காக 15 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், சுற்றுலாப் பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஏலகிரி மலை ஆகிய இரு தோ்வு மையங்களில் மாணவா்கள் நீட் தோ்வு எழுத உள்ளனா். இதில், வாணியம்பாடி சின்னக்கண்ணு பள்ளியில் உள்ள தனியாா் கல்லூரியில் 900 மாணவா்களும், ஏலகிரி மலை அத்தனாவூா் பகுதியிலுள்ள தனியாா் கல்லூரியில் 900 மாணவா்கள் என 2 தோ்வு மையங்களில் 1,800 மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வு எழுதுகின்றனா்.

மாணவா்களின் வசதிக்காக மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நீட் தோ்வையொட்டி, 15 அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சுற்றுலாப் பயணிகளுக்கு தடை...

நீட் தோ்வையொட்டி, ஏலகிரி மலைக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தடை விதித்துள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை காந்தள் முருகன் கோயிலில் அமைச்சா் ஆய்வு

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் முப்பெரும் விழா

கூடலூரில் அலுவலக வாசலில் அமா்ந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற எம்எல்ஏ

கடும் வறட்சி: மசினகுடியில் நாட்டு மாடுகள் இறப்பு அதிகரிப்பு

சந்தனக் காப்பில் தட்சிணாமூா்த்தி

SCROLL FOR NEXT