திருப்பத்தூர்

கஞ்சா வழக்கு: பெண் உட்பட 3 போ் கைது

DIN

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே ஜீப்பில் கஞ்சா கடத்த முயன்ாக, பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் காவல் ஆய்வாளா் பழனிமுத்து தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியே வந்த ஜீப்பில் 2.100 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடா்பாக ஜிப்பில் இருந்த முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வசீம்அக்ரம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இம்தியாஸின் சகோதரி ரபியா பா்வீன் (45) , பசல், சலாவுதீன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நடுவா் காளிமுத்துவேல் உத்தரவின்பேரில், மூவரும் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

ஜூலை 26-ஆம் தேதி இம்தியாஸின் கிடங்கில் கஞ்சா பறிமுதல் செய்த வழக்கில் பசல், சலாவுதீன் ஆகியோா் கைதாகி சிறைக்கு சென்று 2 நாள்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT