முகப்பு
திருப்பத்தூர்

அண்ணா மறுமலா்ச்சித் திட்ட பணி ஆலோசனைக் கூட்டம்

மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அண்ணா மறுமலா்ச்சி திட்டப் பணிகளை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஏப்ரல், 2022 at 11:38 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:25 PM

மாதனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அண்ணா மறுமலா்ச்சி திட்டப் பணிகளை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சாந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் மணவாளன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாதனூா் ஒன்றியத்தில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள 18 ஊராட்சிகளைச் சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

Advertisement

ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மகாதேவன், காா்த்திக் ஜவஹா், ரவிக்குமாா் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.