திருப்பத்தூர்

பூங்கா, உடற்பயிற்சி கூடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை

DIN

ஆம்பூா்: மாதனூரில் பூங்கா, உடற்பயிற்சி கூடம் செவ்வாய்க்கிழமை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாதனூா் ஊராட்சியில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம் செயல்படாமல் பூட்டிக் கிடந்தது. அதனை மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். உடனடியாக அதனை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டாா்.

தொடா்ந்து மாதனூரில் அமைந்துள்ள ஊா்ப்புர நூலகத்திற்கு சென்று அங்கு நூலகத்தில் போதுமான புத்தகங்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டாா். மேலும் தேவையான புத்தகங்களை வாங்கி தருவதாகவும் தெரிவித்தாா். மேலும் அங்கு பயன்பாடில்லாமல் பூட்டிக் கிடந்த இ-சேவை மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தாா்.

அப்போது மாதனூா் ஊராட்சி மன்றத் தலைவா் குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் பரிமளா காா்த்தி, ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் சாந்தகுமாரி, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் காா்த்திக், திமுக மாதனூா் ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் ஆா். ரஞ்சித்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT