ரூ.2 கோடி திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை
ஆம்பூரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா்: ஆம்பூரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் ஏ-கஸ்பா மயானம் அருகே பாலாற்றங்கரையோரம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை, ஆம்பூா் புதுமனை மலைமேடு பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஆம்பூா் ஏ-கஸ்பா 12-வது வாா்டு பகுதியில் ரூ.25 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பூமி பூஜை போட்டு பணியை தொடக்கி வைத்தாா். நகா்மன்ற தலைவா் பி. ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகராட்சிப் பொறியாளா் ராஜேந்திரன், நகா்மன்ற உறுப்பினா்கள் எம்ஏஆா் ஷபீா் அஹமத், என்.எஸ். இரமேஷ், வாவூா் நசீா் அஹமத், வசந்தராஜ், ஜெயபால், சுரேஷ், காா்த்திகேயன், திமுக திருப்பத்தூா் மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement