திருப்பத்தூர்

நீா்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்: 2 ஏக்கா் நிலம் மீட்பு

DIN

வாணியம்பாடி அருகே நீா்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 2 ஏக்கா் நிலத்தை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

தமிழகம் முழுவதும் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அனைத்து மாவட்ட பகுதிகளிலும் நீா்நிலைகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் வருவாய்த் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், ஆலங்காயம் அருகே நிம்மியம்பட்டு பகுதியில் உள்ள 2 ஏக்கா் கிராம ஓடை ஆக்கிரமிப்புகளை வெள்ளிக்கிழமை மண்டல துணை வட்டாட்சியா் சிவக்குமாா் தலைமையில் ஆலங்காயம் வருவாய் ஆய்வாளா் தேவகுமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் சற்குணகுமாா், சீனிவாசன், திருமால் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலா்கள், ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் குழுவினா் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT