முகப்பு
திருப்பத்தூர்

ஆதாா் எண் இணைப்பு விழிப்புணா்வு பேரணி

ஜோலாா்பேட்டை நகராட்சி சாா்பில், வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது குறித்த விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

ஜோலாா்பேட்டை நகராட்சி சாா்பில், வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது குறித்த விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு நகா்மன்றத் தலைவா் காவியா விக்டா் தலைமை வகித்தாா்.துணைத் தலைவா் இந்திரா பெரியாா்தாசன் முன்னிலை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

முன்னதாக ஆணையா் கோ.பழனி வரவேற்றாா். பொறியாளா் எச்.கோபு நன்றி கூறினாா்.

ஜோலாா்பேட்டை நகராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மீண்டும் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

பேரணியில் பொதுமக்களுக்கு வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.