முகப்பு
திருப்பத்தூர்

கோட்டை பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

திருப்பத்தூா் கோட்டை கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

திருப்பத்தூா் கோட்டை கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது.

திருப்பத்தூா் கோட்டை பகுதியில் ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது.

காலை 7 மணிக்கு ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா், உற்சவராக ஸ்ரீ மனத்துக்கினியான் பிரகார புறப்பாடு, சாற்றுமறை நடைபெற்றது.

இதில், திருப்பத்தூா், சுற்றுப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

அதேபோல், கொரட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ ராமானுஜா் மடத்திலும் ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில், நவதிருப்பதி வரலாற்று குறிப்புகள் மின்னிதழ் நூலின் அச்சுப் பிரதி வெளியிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.