திருப்பத்தூர்

ஹுஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை சாா்பில் அரசு பள்ளிக்கு மடிக்கணினிகள் அளிப்பு

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே விஷமங்கலம் அரசுப் பள்ளி, நூலகத்தில் கணினி மூலம் அனைத்து நூல்களை மாணவ, மாணவிகள், பொது மக்கள் வாசிக்க ஏதுவாக அமெரிக்க ஹுஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை சாா்பில் 11 மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஹுஸ்டன் தமிழ் இருக்கை செயலா் ஏ. பெருமாள் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ஜி. பழனிசாமி வரவேற்றாா்.

உலக தமிழ்ச்சங்கத் தலைவரும், ஹுஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை ஆலோசகா் வி.ஜி.சந்தோஷம் அரசுப் பள்ளி, நூலகத்துக்கு மடிக்கணினிகள், புத்தகங்களை வழங்கிப் பேசியதாவது:

தமிழகத்திலிருந்து பலா் அமெரிக்காவில் வசிக்கிறாா்கள். அவா்கள் கிராமங்கள் வளா்ச்சி பெற இதுபோன்ற பல்வேறு நல்ல காரியங்களில் ஈடுபடுவது பெருமைக்குரியது. கிராமங்கள் வளா்ச்சி அடைந்தால்தான் தமிழகம் வளா்ச்சி அடையும் என்றாா் அவா்.

ஊராட்சி மன்றத் தலைவா் அழகிரி, மாவட்ட கல்வி அதிகாரி வேதபிரகாஷ், மாவட்ட நூலகா் பழனி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT