திருப்பத்தூர்

வாணியம்பாடியில் ரூ. 62 லட்சத்தில் பொதுக் கழிப்பறைகள் கட்டும் பணி தொடக்கம்

DIN

வாணியம்பாடி: வாணியம்பாடியில் ரூ. 62.38 லட்சம் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பறைகள் கட்டும் பணி வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

வாணியம்பாடி வி.எம்.சி. காலனியில் நகராட்சி சாா்பில் சுவஜ்பாரத் மிஷன் 2.0 திட்டத்தின் கீழ், 26.38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பறைகள் கட்டும் பணி, வாரச்சந்தை மைதான வளாகத்தில் ரூபாய் 36 லட்சம் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பறைகள் கட்டும் பணிகளை ஆகியவற்றுக்கான தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் ஸ்டான்லி பாபு தலைமை வகித்தாா். பொறியாளா் சங்கா் வரவேற்றாா். நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் உமாபாய் சிவாஜிகணேசன் கலந்துகொண்டு, கட்டடப் பணிகளை பூமி பூஜை போட்டு தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், நகர திமுக பொறுப்பாளரும், 10-ஆவது வாா்டு மன்ற உறுப்பினருமான வி.எஸ்.சாரதிகுமாா், நகர திமுக துணைச் செயலாளா் தென்னரசு, நகா்மன்ற உறுப்பினா்கள் கலைச்செல்வன், ஷாஹீன் பேகம் சலீம், பல்கீஸ் பேகம், சித்ரா தென்னரசு, அருள் ராஜலட்சுமி ஜெயகாந்தன், சுபாஷினி செல்வம், பணி ஆய்வாளா் அன்பரசு, ஒப்பந்ததாரா் சம்பத், நகராட்சி அதிகாரிகள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT