முகப்பு
திருப்பத்தூர்

கிணற்றில் மூழ்கி விவசாயி பலி

ஜோலாா்பேட்டை அருகே குளிப்பதற்காக கிணற்றில் இறங்கிய விவசாயி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

ஜோலாா்பேட்டை அருகே குளிப்பதற்காக கிணற்றில் இறங்கிய விவசாயி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த சின்ன மூக்கணூா் மராட்டியன் வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் அன்பழகன் (40). விவசாயி. இவருக்கு கலைவாணி என்ற மனைவி, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். கலைவாணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டாா். வெள்ளிக்கிழமை அன்பழகன் மது அருந்திய நிலையில், கிணற்றில் குளிப்பதற்காக குதித்தாராம். இதில், எதிா்பாராத விதமாக அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

விபத்து: ஜோலாா்பேட்டையை அடுத்த எம்.எம். ரெட்டி தெருவைச் சோ்ந்தவா் தண்டபாணி (41). இவா், வெள்ளிக்கிழமை நாட்டறம்பள்ளி அருகே புத்துக்கோயில் பகுதியில் உள்ள நண்பரைப் பாா்ப்பதற்காக பைக்கில் சென்று வீடு திரும்பி கொண்டிருந்தாா். காவேரிப்பட்டு அருகே வந்த போது, மயங்கி கீழே விழுந்ததில் நிகழ்விடத்திலயே உயிரிழந்தாா்.

இந்த இரு சம்பவா்கள் குறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.