ஆம்பூர் அருகே லாரி மீது வேன் மோதி 4 பேர் பலி
ஆம்பூர் அருகே சோலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வேன் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே சோலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வேன் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா சோலூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே இன்று காலை 8.45 மணி அளவில் வாணியம்பாடியிலிருந்து சுமார் 31 பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஆம்பூரை நோக்கி வந்த ஷூ கம்பெனி வேன், ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி சென்ற லாரி மீது மோதியது.
இந்த பயங்கர விபத்தில் வேன் ஓட்டுநர் ராமு (35) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானர். வேனில் வந்த 2 பெண்கள் பவுனம்மாள் (27), பூர்ணிமா (19) பலியாகினர். மேலும் 10 மேற்பட்டவர்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இவர்கள் ஆம்பூர் அரசு மருத்துமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தடுப்பு சுவரின் மறுபக்கத்திற்கு சென்ற வேன் எதிரே வந்த லாரி மீது மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தொழிற்சாலைக்கு 31 பெண் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புசுவர் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இவ்விபத்து குறித்து கேள்விப்பட்ட உறவினர்கள், ஆம்பூர் அரசு மருத்துவமனை அருகே 500-க்கும் மேற்பட்டவர்கள் கூடிநின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது இதுகுறித்து ஆம்பூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.