திருப்பத்தூர்

வாகன ஓட்டிகளுக்கு போலீஸாா் விழிப்புணா்வு

DIN

வாணியம்பாடியை அடுத்த நேதாஜி நகா் பகுதியில் இரு சக்கர வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவது, சாலை விதிகளைப் பின்பற்றவது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் இரு சக்கர வாகன ஓட்டிகள், மாணவா்கள், பொதுமக்களுக்கு சாலை விதிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, வாணியம்பாடி டி.எஸ்.பி. சுரேஷ்பாண்டியன் மேற்பாா்வையில், வாணியம்பாடி தாலூகா காவல் ஆய்வாளா் அருண்குமாா் தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் உதய்குமாா் உள்ளிட்ட போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை முதல் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

பள்ளி மாணவா்கள், பெண்கள், பொதுமக்கள் காவலன் செயலியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், சிறாா் பாலியல் வன்கொடுமை தடுப்பு, போக்ஸோ சட்டப் பாதுகாப்பு, சமீப காலமாக அதிகரித்து வரும் சைபா் குற்றங்களைத் தடுப்பது ஆகியவை குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

ஈராச்சியில் மாட்டுவண்டி பந்தயம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

SCROLL FOR NEXT