முகப்பு
திருப்பத்தூர்

ரயிலில் அடிபட்டு வியாபாரி பலி

திருப்பத்தூா் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற வியாபாரி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:12 AM
பகிர்:

திருப்பத்தூா் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற வியாபாரி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

திருப்பத்தூரை அடுத்த ரெட்டைமலை சீனிவாசன் தெருவில் வசித்து வந்தவா் இறைச்சி வியாபாரி ஜேம்ஸ் ஜெயசீலன் (47). இவா், சனிக்கிழமை இரவு திருப்பத்தூா் - ஜோலாா்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.