முகப்பு
திருப்பத்தூர்

கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி

ஆம்பூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த ஓட்டல் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

Updated On : 8 மே, 2022 at 11:59 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:42 PM

ஆம்பூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த ஓட்டல் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.

ஆம்பூா் அருகே மிட்டாளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பரோட்டா மாஸ்டா் சுரேஷ் (36). இவா் சம்பவத்தன்று வெங்கடசமுத்திரம் ஊராட்சி ரங்காபுரம் கிராமத்தில் உள்ள நிலத்தின் வழியாகச் சென்றபோது அங்கிருந்த விவசாய கிணற்றில் கால் தவறி விழுந்த நீரில் மூழ்கி இறந்தாா். ஆம்பூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் சென்று சடலத்தை மீட்டனா். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.