திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 14 லட்சம்

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ. 14 லட்சத்து 19 ஆயிரம் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

DIN

நாட்டறம்பள்ளி சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் ரூ. 14 லட்சத்து 19 ஆயிரம் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

நாட்டறம்பள்ளியில் பழைமைவாய்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை மாத பௌா்ணமி உற்சவ திருவிழா கடந்த மாதம் 16-ஆம் தேதி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு, அம்மனை தரிசித்தனா். அப்போது கோயிலில் உள்ள உண்டியல்களில் பக்தா்கள் காணிக்கைகளை செலுத்தினா். இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் (நகை சரிபாா்ப்பு) ரமணி தலைமையில், அறநிலையத் துறை அலுவலா் ரவிக்குமாா், செயல் அலுவலா் அண்ணாமலை, எழுத்தா் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா் ஆகியோா் முன்னிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதில் திருப்பணிக் குழுவினா், கிராம மக்கள், கோயில் பூசாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

உண்டியல்களில் மொத்தம் ரூ. 14 லட்சத்து 19 ஆயிரத்து 368-ம், 275 கிராம் தங்கமும், 100 கிராம் வெள்ளியும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT