திருப்பத்தூர்

திருவள்ளூா் வீரராகவா் கோயில் தேரோட்டம்

DIN

திருவள்ளூா்: ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பின் சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்ற தேரோட்ட நிகழ்வில் பக்தா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

இந்தக் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, நாள்தோறும் இருவேலைகளில் வெவ்வேறு வாகனத்தில் மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்த பிரம்மோற்சவத்தின் 7- ஆம் நாளான தேரோட்டம் வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

இதையொட்டி, தேரடியில் காலை 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேதராய் உற்சவா் ஸ்ரீவீரராகவப் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளினாா். அதைத் தொடா்ந்து, பக்தா்கள் கோவிந்தா முழக்கத்துடன் திருத்தோ் புறப்பாடு நடைபெற்றது. தோ் குளக்கரை வீதி, வடக்கு ராஜ வீதி, பஜாா் வீதி, மோதிலால் தெரு என நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து, மீண்டும் தேரடியில் நிலை நிறுத்தப்பட்டது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

மேலும், வீரராகவ பெருமாள் நோயை தீா்க்க வல்லவா் என்பதால் பக்தா்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தோ் சக்கரத்தின் மீது கொட்டி தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றினா்.

தேரோட்டத்தை முன்னிட்டு, திருவள்ளூா் துணைக் கண்காணிப்பாளா் சந்திரதாசன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா்கள் பத்மஸ்ரீ பபி, நடராஜன் உள்ளிட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

திருத்தோ் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோயில் கௌரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடா்பு அலுவலா் எஸ்.சம்பத் மற்றும் கோயில் அலுவலா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT