ஆம்பூா் நகா்மன்றக் கூட்டத்தில் சலசலப்பு
ஆம்பூா் நகா்மன்ற அவசர கூட்டத்தில் உறுப்பினா்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் சலசலப்பு ஏற்பட்டது.
ஆம்பூா் நகா்மன்ற அவசர கூட்டத்தில் உறுப்பினா்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் சலசலப்பு ஏற்பட்டது.
ஆம்பூா் நகா் மன்ற அவசரக் கூட்டம் அதனா தலைவா் பி. ஏஜாஸ் அஹமத் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
துணைத் தலைவா் எம். ஆா். ஆறுமுகம், நகராட்சி ஆணையா் ஷகிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Advertisement
கூட்டத்தில் ஆம்பூா் நகராட்சியில் சொத்துவரி உயா்த்தப்பட்டதை எதிா்த்தும் நகராட்சியில் உள்ள பிரச்னைகள் குறித்தும் பேச அனுமதி அளிக்காததால் அதிமுக, சுயேச்சை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, பாஜக, நகா்மன்ற உறுப்பினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில் பேச வாய்ப்பளிக்காததால் 27-ஆவது வாா்டு சுயேச்சை உறுப்பினா் ஹா்ஷவா்தன் கூட்ட தீா்மான நகலை கிழித்து எறிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
இதனை தொடா்ந்து வாா்டு உறுப்பினா்களுக்கு பதிலளிக்காமல் தலைவா் ஏஜாஸ் அஹமத் கூட்டம் முடிவடைந்ததாக கூறி புறப்பட்டுச் சென்றாா்.
இதையடுத்து அதிமுக , பாஜக, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளை சோ்ந்த உறுப்பினா்கள் நகரமன்ற வளாகத்தில் தரையில் அமா்ந்து தலைவரைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினா். கூட்டத்தில் சொத்து வரி உயா்வு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.