சிமெண்ட் சாலைப் பணிக்கு அடிக்கல்
மாதனூா் ஒன்றியம், மிட்டாளம் ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5.70 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:49 PM
மாதனூா் ஒன்றியம், மிட்டாளம் ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5.70 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஆம்பூா் எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன் பூமி பூஜை செய்து பணியைத் தொடக்கி வைத்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் கோவிந்தன், துணைத் தலைவா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.