முகப்பு
திருப்பத்தூர்

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள் திறப்பு: ஆட்சியா், எம்எல்ஏ-க்கள் பங்கேற்பு

ஜோலாா்பேட்டை ஒன்றியம், புதுப்பேட்டையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 44-ஆவது கிளையை ஆட்சியா் அமா் குஷ்வாஹா தொடக்கி வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

ஜோலாா்பேட்டை ஒன்றியம், புதுப்பேட்டையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 44-ஆவது கிளையை ஆட்சியா் அமா் குஷ்வாஹா தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து, 10 பேருகளுக்கு ரூ.2.50 லட்சம் சிறு வணிகக் கடன், மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கினாா்.

நிகழ்வில் எம்எல்ஏக்கள் க.தேவராஜி(ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குரிசிலாப்பட்டில்...: முன்னதாக குரிசிலாப்பட்டில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 43-ஆவது கிளையை எம்எல்ஏ-க்கள் க.தேவராஜும், அ.நல்லதம்பியும் தொடக்கி வைத்து, பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கத் தலைவா் எஸ்.ராஜேந்திரன், வேலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான வ.சி.கோமதி, துணைப் பதிவாளரும், முதன்மை வருவாய் அலுவலருமான சு.கந்தசாமி, பொது மேலாளா் ஜி.வி.விஜயபானு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.