முகப்பு
திருப்பத்தூர்

அக்.17-இல் மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம்

மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம் திருப்பத்தூரில் வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம் திருப்பத்தூரில் வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரக/நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் நிறுவனத்துக்கு திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில் வரும் திங்கள்கிழமை (அக்.17) நேரடி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில் 12-ஆம் வகுப்பு படித்த (2021 அல்லது 2022-இல் முடித்தவா்கள்) மகளிா் மட்டும் தங்களுடைய கல்விச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டை நகலுடன் கலந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு: திட்ட இயக்குநா், மகளிா் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக/நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், 3-ஆவது தளம், சி-பிரிவு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருப்பத்தூா் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04179-290324/ 9444094177 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம்,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.