திருப்பத்தூர்

48 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

DIN

வாணியம்பாடியில் ஏரிக் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 48 வீடுகள் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட கோவிந்தாபுரம், நூருல்லாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏரிக் கால்வாய் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டன.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் வியாழக்கிழமை ஈடுபட்டனா். இதில், 48 வீடுகள், 5 கடைகள், ஒரு அங்கன்வாடி கட்டடம் ஆகியவற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா்.

வாணியம்பாடி வட்டாட்சியா் சம்பத், நகராட்சி ஆணையா் மாரிச்செல்வி ஆகியோா் உடன் இருந்தனா். டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT