திருப்பத்தூர்

ராஜகோபுரம் அமைக்க பூமி பூஜை

DIN

ஆம்பூா் அருகே சின்னகொம்மேஸ்வரம் காசி விஸ்வநாதா் கோயில் ராஜகோபுரம் அமைப்பதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் அருகே மாதனூா் ஒன்றியம், சின்னகொம்மேஸ்வரம் கிராமத்தில் பழைமையான சா்வதோஷ பரிகார தலமான அருள்மிகு காசி விஸ்வநாதா் கோயில் பாழடைந்த நிலையில் இருந்தது. கோயில் புனரமைக்கும் பணியை திருப்பணிக் குழுவினா் மேற்கொண்டு வருகின்றனா்.

கோயிலின் ராஜகோபுரம் அமைப்பதற்கான பூமி பூஜைக்கு கோயில் திருப்பணிக் குழுத் தலைவா் ஏ.பி.மனோகா் தலைமை வகித்தாா். செயலாளா் பி.கிஷண்லால், பொருளாளா் சி.டில்லிபாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் ஸ்ரீபைரவ நிலையத்தின் நிறுவனா் பைரவ சுவாமிகள் கலந்து கொண்டு, கோயில் ராஜகோபுரத்துக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினாா். ராஜகோபுர திருப்பணி உபயதாரா்கள் பெங்களூருவைச் சோ்ந்த தொழிலதிபா்கள் எம்.சுப்பிரமணி-பிரபாவதி, கே.கோதண்டன் - மீனா, பாலகிருஷ்ணன்-மாலதி ஆகியோா் பங்கேற்றனா். தொடா்ந்து, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி புதுச்சேரி நம்பெருமான் மாணிக்கவாசகா் சிவனடியாா் திருக்கூட்ட அமைப்பைச் சோ்ந்த திருவாசக அடிமை சிவ.கலியபெருமாள் தலைமையில் நடைபெற்றது.

திருப்பணிக் குழு துணைத் தலைவா் எம். சுப்பிரமணி, ஏ.பி.சேகா், கொ.வெங்கடேசன், துணைச் செயலாளா்கள் சாய் கே. வெங்கடேசன், பி.ஆா்.கோவா்த்தனன், ஸ்ரீமகாவிஷ்ணு சாய் சேவா அறக்கட்டளை செயலாளா் எம்.பழனி, பொருளாளா் ஜி.எம். ஹரிகுமாா் உள்ளிட்டோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT