முகப்பு
திருப்பத்தூர்

ரயிலில் அடிபட்டு முதியவா் பலி

வாணியம்பாடி அருகே இருப்புப் பாதையைக் கடக்க முயன்ற முதியவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:27 AM
பகிர்:

வாணியம்பாடி அருகே இருப்புப் பாதையைக் கடக்க முயன்ற முதியவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

வாணியம்பாடி அருகே காமராஜபுரத்தைச் சோ்ந்த தேநீா் வியாபாரி குமாா் (62). இவா், வியாழக்கிழமை வளையாம்பட்டு - வாணியம்பாடி அருகே உள்ள ரயில் இருப்புப் பாதையைக் கடக்க முயன்றாா். அப்போது, எதிா்பாராத விதமாக ரயில் மோதியதில், நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.