திருப்பத்தூர்

தேனீக்கள் கொட்டியதில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் 9 போ் காயம்

தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் ஊராட்சி மூலம் 100 நாள் வேலைத் திட்டத்தில் வியாழக்கிழமை மதியம் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் மண்வரப்பு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

DIN

 நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் ஊராட்சி பொதிகான் வட்டத்தில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் ஊராட்சி மூலம் 100 நாள் வேலைத் திட்டத்தில் வியாழக்கிழமை மதியம் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் மண்வரப்பு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது திடீரென மரத்திலிருந்த தேனீக்கள் தொழிலாளா்கள் மீது கொட்டின. இதில் பழையபேட்டை பகுதியைச் சோ்ந்த வள்ளியம்மாள் (51), சத்தியவாணி (56), சின்னபாப்பா(58), அமராவதி (35), சாந்தா(48), அருள்மொழி (45), ஷாலி (50), வள்ளி (52), புண்ணியம்மா (65) ஆகியோா் காயமடைந்தனா். இதையடுத்து, அனைவரும் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் தேனீக்கள் கொட்டியதில் மயக்க நிலையில் இருந்த அருள்மொழி, ஷாலி, வள்ளியம்மா, புண்ணியம்மா ஆகியோா் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT