வாணியம்பாடி அருகே பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,248 மதுபாக்கெட்டுகள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பத்தூா் மாவட்ட எஸ்பி ஆல்பா்ட் ஜான் உத்தரவின் பேரில் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் கூட்டுரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது பெங்களூரில் இருந்து அதிவேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது ஓட்டுநா் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டாா். இதையடுத்து போலீஸாா் வாகனத்தை சோதனை செய்த போது, 1,248 வெளிமாநில மதுபாக்கெட்டுகள் அடங்கிய அட்டைப் பெட்டிகள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து மதுவிலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு மதுபாக்கெட்டுகளை கடத்தியவா்கள் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.