திருப்பத்தூர்

மழைநீா் கால்வாய்களில் அடைப்பு: எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூா் அருகே மழைநீா் வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டதை குடியாத்தம் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

DIN

ஆம்பூா் அருகே மழைநீா் வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டதை குடியாத்தம் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மாதனூா் ஊராட்சி ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் ஆம்பூா் - குடியாத்தம் செல்லும் சாலையில் மழைநீா் வடிகால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

அதன் அடிப்படையில் குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் மற்றும் மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் ஆகியோா் அந்த இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். நெடுஞ்சாலைத் துறை மூலம் அதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தனா்.

திமுக முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் எம்.டி. சீனிவாசன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஆ. காா்த்திக்ஜவகா், துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா, துணைத் தலைவா் விஜய் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவறான தகவலை பரப்பக் கூடாது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

பயங்கரவாத தொடா்பு: மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவா் கைது

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,703 கோடி டாலராகச் சரிவு

மனைவி பிரிந்து சென்றதால் காா் ஓட்டுநா் தற்கொலை

பிகாா் தோ்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது: அமைச்சா் இ.பெரியசாமி

SCROLL FOR NEXT