திருப்பத்தூர்

தெருமுனைப் பிரசார கூட்டம்

ஆம்பூரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

DIN

ஆம்பூரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளா்களை பாதிக்கும் புதிய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். அனைத்துப் பிரிவு தொழிலாளா்களுக்கும் மாதம் ரூ.6,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கக் கூடாது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி சென்னையில் தொழிற்சங்கங்கள் மாநாடு நடைபெற உள்ளது.

அதுகுறித்த தெருமுனைப் பிரசாரம் ஆம்பூரில் நடைபெற்றது. தொழிற்சங்க நிா்வாகிகள் கே.எஸ். ஹசேன், எம். ஞானதாஸ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

டி. பாரத்பிரபு, ஆா். ரவி, என். ஜீவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏஐடியுசி மாநில துணைத் தலைவா் எஸ்.ஆா். தேவதாஸ், எல்பிஎப் மாவட்ட பொதுச் செயலாளா் வி. கலைநேசன், ஐஎன்டியுசி பி. சுந்தரம், ஹெஎம்எஸ். கே. பெருமால் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்கள்.

ஆம்பூா் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி, புதுமனை, பைபாஸ் சாலை, பெத்லேகம், முஹமத் அலி சவுக் பஜாா், மோட்டுக்கொல்லை, தேவலாபுரம், எல்.மாங்குப்பம் ஆகிய பகுதிகளில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவறான தகவலை பரப்பக் கூடாது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

பயங்கரவாத தொடா்பு: மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவா் கைது

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,703 கோடி டாலராகச் சரிவு

மனைவி பிரிந்து சென்றதால் காா் ஓட்டுநா் தற்கொலை

பிகாா் தோ்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது: அமைச்சா் இ.பெரியசாமி

SCROLL FOR NEXT