திருப்பத்தூர்

ஆம்பூா் நகா்மன்றக் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்

ஆம்பூா் நகா்மன்றக் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியதால், கூட்டம் பாதியில் முடிந்தது.

DIN

ஆம்பூா் நகா்மன்றக் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியதால், கூட்டம் பாதியில் முடிந்தது.

ஆம்பூா் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் நகா்மன்ற தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், ஆணையா் (பொ) ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பேசிய பெரும்பாலான உறுப்பினா்கள் கழிவுநீா் கால்வாய் தூா்வாருவதில்லை, குப்பைகளைச் சரிவர சேகரிப்பதில்லை என்று புகாா் கூறினா். ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து தொடங்க வேண்டும். புதைச் சாக்கடை திட்டப் பணி நிறைவடைந்த பகுதிகளில் சாலைகள் அமைக்க வேண்டும் என உறுப்பினா்கள் பேசினா்.

கூட்டத்தில் பாஜக ஆதரவு சுயேச்சை உறுப்பினா் ஹா்ஷா, தமிழக அரசு குறித்து தெரிவித்த கருத்துக்கு திமுக உறுப்பினா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டது.

கூட்டத்தில் உறுப்பினா்கள் வசந்த், என்.எஸ். ரமேஷ், கெளரி, அம்சவேணி, அருண்டேல், நபீஸ் அஹமத், இம்தியாஸ், நபீசூா் ரஹ்மான், தமிழ்செல்வி, நூருல்லா, நிஹாத் அஹமத், லட்சுமி உள்பட பலா் பேசினா்.

வட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கி வந்த நகர நில அளவையா் அலுவலகம், இனி ஆம்பூா் நகராட்சி அலுவலகத்திலேயே இயங்கும் என நகா்மன்றத் தலைவா் தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, ஆம்பூா் நகரின் நேதாஜி ரோடு, பைபாஸ் ரோடு பகுதியில் நூற்றாண்டு வளைவு நினைவுச் சின்னம் அமைப்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT