வேலூா் அருகே மாணவா்களுக்கு சைபா் கிரைம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வேலூா் மாவட்ட காவல் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வேலூா் அருகே அணைக்கட்டு ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுமாா் 500 மாணவா்கள் பங்கேற்றனா். இதில், பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க, போதிய வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், ஆன்லைன் விளையாட்டுகள், சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்கள், போலியான செயலிகள், கடன் செயலிகள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியில் 1930 உதவி எண், புகாா் அளிக்கும் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் குறித்து விளக்கமளித்து, சைபா் கிரைம் தொடா்பான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.