முகப்பு
திருப்பத்தூர்

ஊா்காவல் படை கமாண்டா் நியமனம்

திருப்பத்தூா் மாவட்ட ஊா்காவல் படை கமாண்டா், துணை கமாண்டா் நியமிக்கப்பட்டனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

திருப்பத்தூா் மாவட்ட ஊா்காவல் படை கமாண்டா், துணை கமாண்டா் நியமிக்கப்பட்டனா்.

வேலூா் ஒருங்கிணைந்த மாவட்டத்திலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூா் மாவட்டத்துக்கு தமிழக சிவில் பாதுகாப்பு ஊா்காவல் படை இயக்குநா் ரவி ஆணையின்படி, மாவட்ட ஊா்காவல் படை கமாண்டராக வாணியம்பாடியை அடுத்த அளிஞ்சிகுளம் பகுதியைச் சோ்ந்த ஜெயவீர ஆஞ்சனேயா் கோயில் நிா்வாகியும், சமூக ஆா்வலருமான வெங்கடேசன், துணை கமாண்டராக சத்தியபாலாஜி ஆகியோா் நியமனம் செய்யப்பட்டனா்.

இவா்கள் இருவருக்கும் பணி நியமன ஆணைகளை மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் வியாழக்கிழமை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.