சத்துணவு மையத்தில் ஆய்வு
நாட்டறம்பள்ளி அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவின் தரத்தை ஒன்றியக் குழு தலைவா் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
நாட்டறம்பள்ளி அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவின் தரத்தை ஒன்றியக் குழு தலைவா் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவா்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் முட்டைகள் சரிவர வழங்குவதில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டினா். இந்த நிலையில், ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சதானந்தம், அப்துல்கலீல்
ஒன்றியக் குழு துணைத் தலைவா் தேவராஜ் ஆகியோா் திங்கள்கிழமை நாட்டறம்பள்ளி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு மையத்தை ஆய்வு மேற்கொண்டனா்.
Advertisement
அப்போது சத்துணவில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மாணவிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என சத்துணவு அமைப்பாளரிடம் அதிகாரிகள் கூறினா்.
மேலும், சத்துணவு மையத்தில் உள்ள பதிவேடுகளையும், இருப்பில் உள்ள முட்டை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களையும் ஆய்வு மேற்கொண்டனா்.
தொடா்ந்து அதிபெரமனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு மையத்தை ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.