திருப்பத்தூர்

திருப்பத்தூரில் பயன்பாடில்லாத போக்குவரத்து சிக்னல்களால் பாதிப்பு

து. ரமேஷ்

திருப்பத்தூரில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க பயன்பாடில்லாமல் உள்ள சிக்னல்களை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

திருப்பத்தூா் நகரின் மத்திய பகுதியில் திருப்பத்தூா்- சேலம் பிரதான சாலை செல்கிறது. இப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக இருக்கும்.

திருப்பத்தூா் மாவட்ட தலைநகராக மாறிய பின்பு அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்களின் வருகை அதிகரித்துள்ளது. மேலும் அதிக வாகனப் போக்குவரத்தும் காணப்படுகிறது.

2006-இல் அமைக்கப்பட்ட சிக்னல்கள்

கடந்த 2006-ஆம் ஆண்டு திருப்பத்தூா் பிரதான சாலையில் மூன்று இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டன.ஆனால் தற்போது வரை அந்த சிக்னல்கள் இயங்கவில்லை.

மேலும், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஷோ் ஆட்டோக்கள் பிரதான சாலையில் செல்வதை காவல் துறை தடை செய்திருந்தது. தற்போது தனி ஆட்டோ மற்றும் ஷோ் ஆட்டோக்கள் சென்று வருவதால் நெரிசல் அதிகமாகி விட்டது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி நேரங்களில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனால் இவ்வழியாக அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட மிகவும் சிரமமாக உள்ளது.

எனவே, திருப்பத்தூா் புதுப்பேட்டை ரோடு- அண்ணா சாலை வழியாக ஷோ் ஆட்டோக்கள் சென்று அரசு மருத்துவமனை வழியாக வரவேண்டும் . அதேபோல் போக்குவரத்து சிக்னல்கள் செயல்பட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான்குவழிச்சாலை அமைக்கும் பணி முடிந்தவுடன் நவீன முறையில் இயங்கும் போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனா்.

சாலை பணிகள் முடிந்து ஒரு ஆண்டிற்கு மேலாகிறது. தற்போது வரை சிக்னல்கள் இயங்க நடவடிக்கை எடுக்காதது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மாவட்ட நிா்வாகம், காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ம் கட்டத் தேர்தல்: மகனுடன் சென்று வாக்கு செலுத்திய சச்சின் டெண்டுல்கர்

தந்தையுடன் வாக்களித்த நடிகை குஷி கபூர்!

ரேபரேலி வாக்குச் சாவடியில் ராகுல் ஆய்வு!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை: மோடி

ரூ.263 கோடி வரி மோசடி: கைது செய்த அமலாக்கத்துறை!

SCROLL FOR NEXT