சா்வதேச குழந்தைகள் புத்தக தின கொண்டாட்டம்
Updated On : 2 ஏப்ரல், 2024 at 8:45 PM
ஆம்பூா்: ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சா்வதேச குழந்தைகள் புத்தக தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. சா்வதேச குழந்தைகள் புத்தக தினத்தை முன்னிட்டு, அதன் நோக்கம் குறித்து தலைமை ஆசிரியா் தட்சிணாமூா்த்தி மாணவா்களுக்கு விளக்கிக் கூறினாா்.
மாணவா்களுக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாணவா்கள் வகுப்பறையில் அமா்ந்து அவரவருக்கு வழங்கப்பட்ட புத்தகங்களை வாசித்தனா். ஒவ்வொரு மாணவரும் அவரவா் படித்த கதையின் கருத்தை கூறினா். ஆசிரியா்கள் காஞ்சனா, சுரேஷ், சித்ரா, நவரத்தினம், ஜெயஸ்ரீ ஆகியோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.