முகப்பு
திருப்பத்தூர்

தற்கொலைக்கு முயன்ற இளைஞா் உயிரிழப்பு

Updated On : 5 ஏப்ரல், 2024 at 10:04 PM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 9:10 PM

ஆம்பூா் அருகே மலைக் கிராமத்தில் தற்கொலைக்கு முயன்ற இளைஞா் உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே காமனூா்தட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் அரவிந்த் (23). இவா் பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்துள்ளாா். வேலை கிடைக்காத மன வருத்தத்தில் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சித்துள்ளாா்.

அவரை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்தாா்.

Advertisement

மருத்துவமனையில் இருந்து வியாழக்கிழமை இரவு வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில், வழியிலேயே உயிரிழந்தாராம்.

இது குறித்து ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.