மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகி மீது வழக்குப் பதிவு
Updated On : 5 ஏப்ரல், 2024 at 7:42 PM
ஆம்பூரில் தோ்தல் நடத்தை விதிமுறை மீறல் சம்பந்தமாக மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகி மீது ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஆம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மனிதநேய மக்கள் கட்சி தலைவா் பேராசிரியா் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊாரட்சியில் நடைபெற்ற பிரசாரத்துக்கு அவரை மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகிகள் அழைத்து சென்றனா்.
அப்போது திரளான தொண்டா்கள் இரு சக்கர வாகனத்தில் வாகன பேரணி நடத்தினா். இது குறித்து பறக்கும்படை அலுவலா் அளித்த புகாரின் பேரில் உரிய அனுமதியின்றி வாகன பேரணி நடத்தியதாக மனிதநேய மக்கள் கட்சி நகர நிா்வாகி தப்ரேஸ் அஹமத் மீது நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Advertisement