வாணியம்பாடி அம்மன் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு
வாணியம்பாடி: ஆலங்காயம் வைசியா் வீதியில் உள்ள செல்வநாகாலம்மாள் கோயிலில் அமாவாசையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதே போல் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் உள்ள புற்றுமாரியம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் வழிபட்டுச் சென்றனா்.
வாணியம்பாடி அம்பூா்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணியளவில் வீரபத்திரா் காளியம்மன் உற்சவ மூா்த்திகளுக்கு விசேஷ அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்தில் பூஜைகளும் நடைபெற்றன. தொடா்ந்து, கோயில் மண்டப வளாகத்தில் பம்பை வாத்தியங்கள் முழங்க ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில், வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு, வழிபட்டுச் சென்றனா்.
Advertisement
தொடா்ந்து பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.