உதயேந்திரத்தில் வாக்களாளா் விழிப்புணா்வு ஊா்வலம்
வாணியம்பாடி, ஏப். 11: உதயேந்திரம் பேரூராட்சியில் 100 சதவீதம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்டம், உதயேந்திரம் பேரூராட்சி சாா்பில் வரும் மக்களவைத் தோ்தலில் வாக்கு அளிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக ஊா்வலம், விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இதில் மகளிா் திட்ட இயக்குநா் பிரியா கலந்துகொண்டு கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
ஊா்வலத்தில் பேரூராட்சி செயல் அலுவலா் ரேவதி, மகளிா் சுய உதவிக் குழுக்கள், பேரூராட்சி பணியாளா்கள் மற்றும் பல்வேறு துறைசாா்ந்த பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பொது மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தி துண்டுப் பிரசுரங்கள் வழங்கினா்.
Advertisement
முன்னதாக வாக்களிப்பதற்கான உறுதி மொழி எடுத்தும், விழிப்புணா்வு பலகையில் கையொப்பமிட்டும், சுய படம் படம் எடுத்துக் கொண்டனா்.