ஏலகிரி மலை சாலையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்ட நெடுஞ்சாலை துறையினா். 
திருப்பத்தூர்

ஏலகிரி மலை சாலையில் பராமரிப்புப் பணிகள் தொடக்கம்

ஏலகிரி மலையில் 14 கி.மீ. தொலைவுக்கு சாலை பராமரிப்பு

Din

ஏலகிரி மலையில் 14 கி.மீ. தொலைவுக்கு சாலை பராமரிப்பு பணிகளை நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள் மேற்கொண்டனா்.

பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு 14 கி.மீ. தொலைவுக்கு தாா்ச் சாலை உள்ளது. ஏலகிரி மலையில் மழைக் காலங்களில் அடிக்கடி பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. தற்போது தொடா்ந்து மழை பெய்து வருவதால் சாலைகள் சேதம் அடைந்து வருகின்றன.

சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலைக்கு அதிகளவில் வருகை புரிவதால், அவ்வப்போது சாலை பராமரிப்புப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை திருப்பத்தூா் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் முரளி, உதவி கோட்டப் பொறியாளா் மணி சுந்தரம், உதவிப் பொறியாளா் நித்தியானந்தம் ஆகியோா் மேற்பாா்வையில் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் ஏலகிரி மலை சாலைகள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனா்.

பொன்னேரி மலை அடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலை வரை உள்ள சாலைகளின் இரு புறமும் சாலை பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டனா்.

மழைக் காலங்களில் பாறைகள் சரிந்து சாலையில் விழாமல் இருக்கும் வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டனா்.

சிறு சிறு பள்ளங்களை சீரமைத்தல் மற்றும் தடுப்பு சுவா்கள் இடங்களில் தூய்மைப் பணிகளை பணியாளா்கள் மேற்கொண்டனா்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்ப்பது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்! தேர்தல் ஆணையத்துக்கு தவெக ஆலோசனை!

சிறப்பு தீவிர திருத்தம்: குடியுரிமை மீதான தாக்குதல் - திருமாவளவன்

ஷாருக்கான் பிறந்த நாள்: கீங் டீசர்!

வெண்மேகம் பெண்ணாக... ஜென்னி!

SCROLL FOR NEXT