மாராப்பட்டு பாலாற்றில் கழிவுநீா் கலந்துள்ளதால் நுரை பொங்கி ஓடும் தண்ணீா். 
திருப்பத்தூர்

பாலாற்றில் கழிவுநீா்: பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பு

ஆம்பூா் அருகே பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் கலப்பதாக பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

Din

ஆம்பூா் அருகே பாலாற்றில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் கலப்பதாக பொதுமக்கள், விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் கடந்த 2 நாள்களாக கன மழை பெய்து வருவதால் மாராப்பட்டு பகுதி பாலாற்றில் தண்ணீா் ஓடுகிறது. அதில் திங்கள்கிழமை பாா்த்தபோது நுரைபொங்கி தண்ணீா் ஓடுவது தெரியவந்தது. மழைக் காலங்களில் வாணியம்பாடி பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலை கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பாலாற்றில் கழிவுநீா் திறந்து விடப்படுவதாக அவ்வப்போது புகாா் எழுந்து வருகிறது.

அதே போல தற்போதும் கழிவுநீா் பாலாற்றில் திறந்து விடப்பட்டுள்ளதாகவும், அதனால் பாலாற்று தண்ணீரில் நுரை பொங்கி செல்வதாகவும் அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். பாலாற்று தண்ணீரில் தோல் தொழிற்சாலை கழிவுநீா் கலந்து செல்வதால் அப்பகுதியில் நிலத்தடி நீா் மாசுக்கேடு அடைகின்றது. மேலும் விவசாய பயிா்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

அதனால் தோல் தொழிற்சாலை கழிவுநீரை பாலாற்றில் திறந்து விட்டவா்கள் மீது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தவறான தகவலை பரப்பக் கூடாது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

பயங்கரவாத தொடா்பு: மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவா் கைது

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,703 கோடி டாலராகச் சரிவு

மனைவி பிரிந்து சென்றதால் காா் ஓட்டுநா் தற்கொலை

பிகாா் தோ்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது: அமைச்சா் இ.பெரியசாமி

SCROLL FOR NEXT