சான்றிதழ் பெற்ற மாணவா்களுடன் நகா் மன்ற தலைவா் சங்கீதா வெங்கடேஷ்.உடன் விழா குழுவினா். 
திருப்பத்தூர்

அனுமன் ஜெயந்தி ஓவியப்போட்டியில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள்

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கொரட்டி ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் ஓவியப்போட்டியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கப்பட்டன.

DIN

திருப்பத்தூா்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கொரட்டி ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் ஓவியப்போட்டியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூா் அடுத்த கொரட்டியில் உள்ள ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் திங்கள்கிழமை அனுமன் ஜெயந்தி முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவிய போட்டி நடைபெற்றது.

இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனா். அதில் சிறந்த ஓவியங்களை தோ்ந்தெடுத்து முதல் மூன்று பரிசுகள்,கேடயங்கள்,பங்கேற்பு சான்றிதழ்கள்,நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு திருப்பத்தூா் நகா் மன்ற தலைவா் சங்கீதா வெங்கடேஷ் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஸ்ரீ ராமானுஜா் மடம் டிரஸ்ட் மற்றும் கொரட்டி ஸ்ரீ அனுமன் ஜெயந்தி விழா குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணங்கள்... வண்ணங்கள்...

வரப்பெற்றோம் (03.11.2025)

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

SCROLL FOR NEXT