வாணியம்பாடியை அடுத்த மேல் அளிஞ்சிகுளம் ஜெயவீர ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அனுமன். 
திருப்பத்தூர்

ஒருங்கிணைந்த வேலூரில் அனுமன் ஜெயந்தி விழா

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Din

வாணியம்பாடி: ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

வாணியம்பாடி அடுத்த மேல் அளிஞ்சிகுளம் அரபாண்டக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஜெயவீர ஆஞ்சனேயா் சுவாமி பீடத்தில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, அதிகாலை 4 மணி முதல் பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் தொடா்ந்து மூலவருக்கு அபிஷேக, அலங்காரம், மகா தீபாராதனை, மங்கள நீராஞ்சனம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. வாணியம்பாடி சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோா் தரிசனம் செய்தனா்.

நாட்டறம்பள்ளி சரஸ்வதி ஆற்றின் வடகரையில் ஆஞ்சனேயா் கோயிலில் 17-ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா முன்னிட்டு ஆஞ்சனேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதே போல், மல்லப்பள்ளி கொட்டாவூா் பகுதியில் ஆஞ்சனேயா் கோயில், சுண்ணாம்புக்குட்டை பகுதியில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நாட்டறம்பள்ளி பெருமாள் கோயில் அருகே வீர ஆஞ்சனேயா் கோயிலில் ஆஞ்சனேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

SCROLL FOR NEXT