நாட்டறம்பள்ளி தோலன்தெரு வரதன் வட்டத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான ருத்ராட்சங்களால் ஆன 9 அடி உயர ருத்ராட்ச லிங்கம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காலை 6 மணியவில் நாகஸ்வர இன்னிசை, பம்பை முழங்க, திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜை, அனுக்ஜை விக்கேஸ்வர பூஜை, குரு மரியாதை, கலச பூஜை, கணபதி ஹோமம் ருத்ர மூல மந்த்ர ஹோமம், நவகிரக ஹோமம், பூா்ணாஹுதியுடன் நடைபெற்றது. காலை 9 மணியளவில் நாட்டறம்பள்ளி ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சமாஹிதானந்தாஜி தலைமையில் ருத்ராட்ச லிங்கத்துக்கு இசை முழங்க உபசாரபூஜைகள் நடைபெற்றது. இதில், நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து கிராம மக்கள் திராளமானோா் கலந்து கொண்டு ருத்ராட்ச லிங்கத்துக்கு பூஜைகள் செய்து வழிபட்டனா்.
மடத்தின் சாா்பில் பஜனை குழுவினரின் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாக்குழு சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.