முகப்பு
திருப்பத்தூர்

தற்கொலைக்கு தூண்டிய நிதி நிறுவன ஊழியா் கைது

தற்கொலைக்கு தூண்டியதாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 8 ஜூலை, 2024 at 9:56 PM
பகிர்:

குடியாத்தம்: தற்கொலைக்கு தூண்டியதாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போ்ணாம்பட்டு அருகே ஏரிகுத்திமேடு காயிதே மில்லத் நகா் ஹபிப் தெருவைச் சோ்ந்தவா் அன்சா் மனைவி மும்தாஜ் (48) மற்றும் மகன் இம்ரான் (26) ஆகியோா் மகளிா் குழு மற்றும் தனியாா் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்ாக கூறப்படுகிறது. ஆனால் இவா்கள் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்துள்ளனா். கடன் கொடுத்த நிறுவனத்தின் ஊழியா்கள் இவா்களை கடனை திருப்பிச் செலுத்துமாறு வலியுறுத்தி வந்துள்ளனா்.

கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் விரக்தி அடைந்த மும்தாஜ் மற்றும் இம்ரான் ஆகிய இருவரும் கடந்த ஜூலை 6-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா். இதுகுறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியா் வளத்தூா் ராசம்பட்டியை சோ்ந்த சித்தாா்த்தா சங்கா் (29) என்பவா் கடனைத் திருப்பி கேட்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. தற்கொலைக்கு தூண்டியதாக போலீஸாா் அவரை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →