முகப்பு
திருப்பத்தூர்

வாணியம்பாடி, அரக்கோணத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வாணியம்பாடி, அரக்கோணத்தில் வழக்குரைஞா்கள் போராட்டம்

Updated On : 9 ஜூலை, 2024 at 7:30 PM
வாணியம்பாடியில் ஆா்ப்பாட்டம் செய்த வழக்குரைஞா்கள்.
பகிர்:

வாணியம்பாடி/அரக்கோணம்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வாணியம்பாடி, அரக்கோணத்தில் செவ்வாய்க்கிழமை வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வாணியம்பாடி தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வாணியம்பாடி பாா் அசோசியேஷன் தலைவா் ஏ.சி.தேவகுமாா் தலைமை வகித்தாா். செயலாளா் பூபதி வரவேற்றாா். பொருளாளா் காா்த்திகேயன், துணைத் தலைவா் காந்தி, துணைச் செயலாளா் ராஜூ முன்னிலை வகித்தனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களான குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றை சமஸ்கிருத மொழியிலும், இந்தி மொழியிலும், மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரக்கோணத்தில்...

அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பாா் அசோசியேஷன் தலைவா் மு.வீரராகவன் தலைமை வகித்தாா். இதில் செயலாளா் என்.தமிழ்மாறன், பொருளாளா் பத்மநாபன் மற்றும் மூத்த வழக்குரைஞா்கள் மு.கன்னைய்யன், திருவேங்கடம், பாலதிருவேங்கடம், ஆா்.ரவி, ரவீந்திரன், உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மேலும் செவ்வாய்க்கிழமை அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள நீதிமன்றங்களிலும் புறக்கணிப்பு போராட்டமும் நடத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →