குளித்திகை ஜமீன் கிராமத்தில் மணல் கடத்தலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட பள்ளம் தோண்டும் பணி. 
திருப்பத்தூர்

மணல் கடத்தலை தடுக்க பாலாறு கரையோரங்களில் ராட்சத பள்ளம் தோண்டும் பணி

ஆம்பூர் வட்டத்தில் மணல் கொள்ளையை தடுக்கும் புதிய முயற்சி

Din

ஆம்பூா் வட்டத்தில் மணல் கடத்தலைத் தடுக்க பல ஆற்றல் கரையோர பகுதி வழியில் வருவாய்த்துறை சாா்பாக ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.

ஆம்பூா் வட்டத்தில் பாலாற்றில் இருந்து மணல் கடத்தல் அதிக அளவில் நடைபெற்று வருவதாக புகாா் எழுந்தது. அதன் அடிப்படையில் ஆம்பூா் வட்டாட்சியா் மோகன் தலைமையில் மணல் கடத்தலைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் பாலாற்றங்கரையோர பகுதிகளில் ராட்சத பள்ளங்கள் தோண்டி மணல் கொள்ளையை தடுப்பதென முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மாதனூா் ஒன்றியம் குளித்திகை ஜமீன் கிராமம், பாப்பனப்பள்ளி ஆகிய கிராமங்களில் பாலாற்றங்கரை ஓரம் ஜேசிபி வாகனம் மூலமாக ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. வருவாய் ஆய்வாளா்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் மேற்பாா்வையில் இப்பணி நடைபெற்றது.

வாரணாசி வெளியீட்டுத் தேதியை உறுதி செய்தார் ராஜமௌலி!

சுற்றுலா என்றாலே வியட்நாம், சிங்கப்பூர் என்றில்லை: சுற்றுலா பதிவர் கார்த்திக் முரளி!

மகாத்மா காந்தி நினைவு நாள்! RN Ravi மரியாதை!

இது தெரியுமா? தொலைபேசியை எடுத்தவுடன் ஹலோ என்று சொல்வது ஏன்?

சேட்டன் வருகிறார் வழி விடுங்க... சாம்சனுக்குப் பாதுகாவலராக மாறிய சூர்யகுமார்!

SCROLL FOR NEXT