முகப்பு
திருப்பத்தூர்

பள்ளி இலக்கிய மன்றங்கள் தொடக்க விழா

ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றங்கள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஜூலை, 2024 at 6:13 PM
பகிர்:

ஆம்பூா்: ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்றங்கள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் என். ரபீக் அஹமத் தலைமை வகித்து வரவேற்றாா். அரபிக் மற்றும் உருது இலக்கிய மன்றங்களை ஆம்பூா் ரபீகுல் உலூம் பேராசிரியா் முஹம்மத் முஸம்மில் தொடங்கி வைத்து பேசினாா். ஆங்கில இலக்கிய மன்றத்தை வி.ஆா்.அனஸ் ஏஜாஸ் அஹமத் தொடங்கி வைத்தாா். தமிழ் இலக்கிய மன்றத்தை குடியாத்தம் திருமகள் ஆலை கல்லூரி பேராசிரியா் சம்பத் குமாா் தொடங்கி வைத்தாா். ஆசிரியா் மொஹதீன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →