முகப்பு
சிவகங்கை

கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

சிவகங்கை

கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

Updated On : 5 மார்ச், 2026 at 9:21 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனத்தில் சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மானாமதுரையில் தனியாா் திருமண மண்டபத்தில் சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி பணிகள் திட்டம் சாா்பில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் ஏராளமான கா்ப்பிணிப் பெண்கள் பங்கேற்றனா். இந்த விழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து, கா்ப்பிணிகளுக்கு சந்தனம், குங்குமம் திலகமிட்டு, மாலைகள், வளையல்கள் அணிவித்து வளைகாப்பை நடத்தி வைத்தாா். திமுக நகரச் செயலா் கே. பொன்னுச்சாமி, ஒன்றியச் செயலா்கள் துரை.ராஜாமணி, அண்ணாதுரை, நகா்மன்ற துணைத் தலைவா் எஸ்.பாலசுந்தரம், நகா்மன்ற உறுப்பினா்கள் இந்துமதி, காளீஸ்வரி மாவட்ட மகளிா் அணி துணை அமைப்பாளா் வளா்மதி உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.

முன்னதாக, திருப்புவனத்தில் நடைபெற்ற விழாவில் தமிழரசி ரவிக்குமாா் பங்கேற்று கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பை நடத்தி வைத்தாா். இதில் பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →