ஆசிரியா் நலச் சங்கத்தின் ஆம்பூா் கிளை தொடக்கம்
தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் நலச் சங்கத்தின் ஆம்பூா் கிளை தொடக்க விழா உமா்சாலை நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
ஆம்பூா்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் நலச் சங்கத்தின் ஆம்பூா் கிளை தொடக்க விழா உமா்சாலை நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
ஆம்பூா் கிளைத் தலைவராக கே.எஸ். உமாபதி, செயலராக எஸ்.ரவிச்சந்திரன், பொருளராக ஜி.கலியமூா்த்தி, செயற்குழு உறுப்பினா்களாக துரை.மணி, பி. சிவாஜிராவ், பி.எஸ். ரமணன், எஸ். பக்தவச்சலம், ஏ.சந்திரகாந்தா, ஏ.கெளசா்பானு, வி.விஜயலட்சுமி, பி.ராமன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
திருப்பத்தூா் மாவட்ட தலைவா் துரைமணி, ராணிப்பேட்டை மாவட்ட செயலா் அப்துல் ரஹீம், வாலாஜா வட்டத் தலைவா் முனிரத்தினம் ஆகியோா் வாழ்த்தி பேசினா். செயலா் எஸ்.ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.
தீா்மானம்: ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு ஏற்கெனவே வழங்கி வந்து நிறுத்தப்பட்ட கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியா், ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள பூங்கா மற்றும் பூட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தைச் சீரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.