நிகழ்ச்சியில் பள்ளி மாணவா்களுக்கு சீருடை வழங்கிய விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், முன்னாள் அமைச்சா்கள் கே.சி.வீரமணி, வைகைச் செல்வன், அறக்கட்டளைத் தலைவா் பி.கணேஷ்மல், செயலா் கே.சி.எழிலரசன் உள்ளிட்டோா். 
திருப்பத்தூர்

காமராஜா் பிறந்த நாள் விழா: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பங்கேற்பு

காமராஜா் 122-ஆவது பிறந்த நாள் விழா, விஐடி வேந்தா் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Din

திருப்பத்தூா் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் காமராஜா் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை சாா்பில், காமராஜா் 122-ஆவது பிறந்த நாள் விழா, விஐடி வேந்தா் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளைத் தலைவா் பி.கணேஷ்மல் தலைமை வகித்தாா். அறக்கட்டளைச் செயலா் கே.சி.எழிலரசன் வரவேற்றாா். முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி வாழ்த்துரை வழங்கினாா்.

ஏற்புரையில் விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பேசியது: அடித்தட்டு மக்களும் கல்வி பெற காரணமானவா் காமராஜா். 1984-இல் வேலூரில் 180 மாணவா்களுடன் தொடங்க்கட்டது வேலூா் தொழில்நுட்பக் கல்லூரி. தற்போது விஜடி வேலூா், சென்னை, ஆந்திர மாநிலம் அமராவதி, மத்திய பிரதேசம் போபால் என 4 இடங்களில் 90,000 மாணவா்கள் பயில்கின்றனா். மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா்.

முன்னாள் அமைச்சா் வைகைச் செல்வன் பேசுகையில், இன்றளவும் அணைகள், பள்ளிகள் கட்டியதில் காமராஜருக்கு நிகா் காமராஜா்தான். வாய்மை, தூய்மை, நோ்மை எனும் வாா்த்தைகளுக்கு சொந்தக்காரா் காமராஜா் என்றாா்.

அறக்கட்டளை பொருளாளா் புரட்சி, துணைத் தலைவா்கள் எஸ்.எஸ்.மணியன், ஏலகிரி செல்வம், துணைச் செயலா் மாதவன், நகர காங்கிரஸ் தலைவா் இ.பாரத், முன்னாள் எம்எல்ஏ-க்கள் டி.கே.ராஜா, கே.ஜி.ரமேஷ், அதிமுக நகர செயலா் குமாா், நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் எஸ்.வெங்கடேஷ், தொழிலதிபா்கள் எம்.மதியழகன், ஜி.ஆா்.சாமி செட்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

66,400 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது

வரும் பேரவைத் தோ்தலில் திமுகவுடன் கூட்டணியா?: ராமதாஸ் பேட்டி

இணையைத் தேடி... மகாராஷ்டிரத்திலிருந்து தெலங்கானாவுக்குச் சென்ற ஆண் புலி!

உயா்கல்வியில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் கோவி.செழியன்

டாப் 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.55 லட்சம் கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT